தொடங்கியது பாராளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர், 14 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்
Janani G 4 months ago தேசிய செய்திகள்
நாட்டின் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்த 14 புதிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில், பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் சட்டம் மற்றும் இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது தொடர்பான மசோதாக்கள் ஆகியவை அடங்கும்.
அதே சமயம், எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய விவகாரங்களை எழுப்பத் தயாராக உள்ளன. SIR பணி நியமனங்கள் மற்றும் அண்மையில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி சபையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
0 Comments