தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், சர்வே முடிவுகள் காட்டும் அரசியல் திருப்பம்
The Forecast 2 months ago தமிழ்நாடு
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், VOTE VIBE மற்றும் CHANAKYA நிறுவனங்கள் தனித்தனியாக நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை CNN News 18 வெளியிட்டுள்ளது.
VOTE VIBE சர்வேயின்படி, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின் 33.3% ஆதரவைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி 29.8% மற்றும் நடிகர் விஜய் 23.2% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
இதேபோல், ஜனவரியில் CHANAKYA நிறுவனம் நடத்திய சர்வேயில் மு.க. ஸ்டாலின் 37%, எடப்பாடி கே. பழனிசாமி 33% மற்றும் விஜய் 24% ஆதரவைப் பெற்றுள்ளதாக.
இரு கருத்துக்கணிப்புகளும் தமிழ்நாடு அரசியல் களத்தில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்துகின்றன. மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி இடையே முன்னிலை மாறுபட்டாலும், நடிகர் விஜய்க்கு கிடைக்கும் கணிசமான ஆதரவு எதிர்கால அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்காளர்களின் மனநிலை மேலும் மாறக்கூடும் என்னும் கருத்தும் நிலவி வருகிறது.
0 Comments