2026 தேர்தல் : வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தவெக கட்சிகயின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
The Forecast 2 months ago தமிழ்நாடு
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களின் கவனத்தை தன்னுடைய அரசியல் இயக்கமான தவெக பக்கம் திருப்ப விஜய் தீவிரமான திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தவெக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இலவசங்களை மையமாக்காமல், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், நிர்வாக சீர்திருத்தம் போன்ற மக்களுக்குப் பயனளிக்கும் அம்சங்கள் இதில் இடம் பெறும் என தகவல். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் இலவச அரசியலை எதிர்கொள்ள தவெக அறிக்கை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. இந்த அறிக்கை, வரவிருக்கும் தேர்தலில் தவெக அரசியலுக்கு தெளிவான திசை காட்டுமா என்பதை காலம் நிர்ணயிக்கும்.
0 Comments