2026–27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பொதுமக்களை நேரடியாக ஈர்க்கும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம். பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான முடிவு எடுக்கப்படும். இந்த இடைக்கால பட்ஜெட், மாநிலத்தின் வருங்கால வளர்ச்சிக்கும் அரசியல் சூழலுக்கும் முக்கிய வழிகாட்டியாக அமையும்.
0 Comments