Loading . . .




தமிழக புதிய டிஜிபி யார்? விரைவில் அறிவிப்பு

Janani G 2 hours ago தமிழ்நாடு


தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புதிய டிஜிபி பதவிக்காக மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களுக்கு ஒன்றிய பொது சேவை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் இவர்களில் ஒருவர் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் ராஜீவ் குமார் (இ.கா.ப.), சந்தீப் ராய் ரத்தோர்  (இ.கா.ப.) மற்றும் மகேஷ் குமார் அகர்வால்  (இ.கா.ப.) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காவல் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட இந்த அதிகாரிகள் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளனர்.

தமிழக காவல் துறையின் உயரிய பதவியாக கருதப்படும் டிஜிபி பொறுப்பு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் காவல் துறை நிர்வாகத்தை முழுமையாக கண்காணிக்கும் முக்கிய பொறுப்பாகும். எனவே இந்த நியமனம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ள இந்த பட்டியலை மாநில அரசு ஆய்வு செய்து இறுதி முடிவை அறிவிக்க உள்ளது. புதிய டிஜிபி நியமனம் தமிழக காவல் துறையின் எதிர்கால நிர்வாக நடவடிக்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News