Loading . . .




1-ஆம் வகுப்பு பயிலும் A.S.வர்ஷினிகா அவர்கள், ஒடிசா மாநிலத்தில் தேசிய சதுரங்க போட்டியில் முதலிடம் MLA கண்ணன் வாழ்த்து

Arut Selvan 3 years ago கண்ணன்

இன்று (22-05-2022) மாலை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில்,உடையார்பாளையம் பேரூரை சேர்ந்த சரவணன்-அன்புரோஜா ஆகியோரின் மகள் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு பயிலும் A.S.வர்ஷினிகா அவர்கள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் KIIT University யில்,16-05-2022 முதல் 20-05-2022 வரை நடைபெற்ற இந்தியாவின் 28 மாநிலங்களின் 7 வயதுக்குட்பட்ட சதுரங்க  வீரர் & வீராங்கனைகள் கலந்துகொண்ட 10-வது இந்திய மாபெரும்  சதுரங்க போட்டியில், பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணியில் இடம் பெற்று முதல் இடத்தை வென்றுள்ளதை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.உமா சரஸ்வதி மற்றும் பெற்றோர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

கண்ணன் Relateted News