நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் . அர. சக்கரபாணி அவர்கள் எச்சரிக்கை!!
(09.02.2022) 'இந்து தமிழ் திசை' நாளிதழில் "காவிரி நெல்லுக்குக் கொள்முதல் தேவை; வல்முதல் எதற்கு?" என்ற தலைப்பில் . தங்க. ஜெயராமன் அவர்கள் எழுதிய கட்டுரையில் "நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு முப்பது ரூபாய் கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். முப்பது என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது" என்று எழுதியிருந்ததை முதலமைச்சர் அவர்கள் படித்து என்னை அலைபேசியில் உடனே அழைத்து இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, கட்டுரை ஆசிரியரிடமும் பேசி தெரிவித்திருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் நம் முதலமைச்சர் அவர்கள் நெல் கொள்முதலில் எவ்விதத்தவறும்
நடைபெறக்கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்; நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை ரூ.10/- ஆக உயர்த்தியதோடு பருவகால பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120/- மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100 / கூடுதலாக வழங்க ஆணையிட்டார்கள்.
கடந்தஆட்சிக் காலத்திலிருந்ததைப் போன்று நெல் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு நாற்பது ரூபாய் பெற்றதை நிறுத்துவதோடு நம் ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 83 கோடி ரூபாய் கூடுதல் செலவானாலும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது என்று கூறி என்னை அழைத்து ஊதியத்தைக் கணிசமாக உயர்த்திக் கொடுத்துள்ளதால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி இனி நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அவ்வாறே செய்ததோடு ஆய்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் அனைவருக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் மேலாண்மை கழக இயக்குனரையும் அழைத்து தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை அலுவலகங்களுக்கும் எடுக்க அறிவுறுத்தியதோடு, இதை வலியுறுத்தி அனைத்து மண்டல நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கூறியுள்ளேன்.
0 Comments