இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி
The Forecast 3 years ago காங்கிரஸ்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, மல்லிகார்ஜூன கார்கே 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி 3 பேருமே மறுத்துவிட்டனர். கட்சி தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கலில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்பி, சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.
அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் மட்டுமே வாக்கினை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று சசி தரூருக்கு ஆதரவு அளித்த கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..
இறுதியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.. இதையடுத்து, டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் கார்கே ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து, 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments