அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜேஷ்லக்கானி, மா.சிவலிங்கராஜன்தலைமையிலான குழுவினால் பருவமழையிலும், வெள்ளத்திலும் மின்சார துறையின் துரித நடவடிக்கை தமிழக மக்கள் மகிழ்ச்சி
The Forecast 3 years ago மின்சார துறை
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் கே.கே.நகர் 110/33/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டார்.
அமைச்சர் சென்னை, கே.கே.நகர் துணை மின்நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்து
அங்கு உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு துணைமின் நிலையங்களில்
மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கும் மழைநீரை
உடனடியாக வெளியேற்றி மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்கவும்,
பாதுகாப்பாக பணியாற்றிடவும் அறிவுரை வழங்கினார்கள். பின்னர். அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகள்
உள்ளடக்கி ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை
ஆணைகளாக வழங்கினார்கள், மின்சாரத்துறை சார்பாக தொடர்ந்து
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த ஆண்டு வடகிழக்கு
பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் கண்டயறியப்பட்டு இந்த ஆண்டு
பாதிப்புகள் இல்லாத வகையில் அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. 10துணை மின் நிலையங்களில் உள்ள 16 மின்மாற்றிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்பொழுது அந்த
இடத்திலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சீரான மின்விநியோகம் செய்வதற்காக 2.700 பில்லர் பாக்ஸ் தரையிலிருந்து 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தி
சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக 1,440 பேர் பணியிலும், இரவு நேரங்களில் 600 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையை பொருத்துவரைக்கும் 1,800 பீடர்கள் மொத்தம் இருக்கு அதில் ஒன்று கூட மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை,
முழுவதுமாக 100 சதவீதம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எல்லா பகுதியிலும் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு மட்டும் இரண்டு இடங்களில் மின்விநியோகம் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
நிமிடங்களில் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, இந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 18.380 மின்மாற்றிகள்
கையிருப்பு உள்ளன, அதே போல 5000 கீ.மீ அளவிற்க்கு மின்கடத்திகள் கையிருப்பு உள்ளன. 1.5 இலட்சம் மின்கம்பங்கள் உள்ளன. கூடுதலாக 50,000 மின்கம்பங்கள்
வரவழைக்கப்பட்டு மொத்தம் 2 இலட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருக்கிறது, எனவே, மின்விநியோகத்தை பொறுத்த வரைக்கும் தமிழகம்
முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்றும்,
இன்றும் பெய்த மழையால் எந்த வித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வடகிழக்க பருவமழை முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஏறத்தாழ 40,000 மின்கம்பங்கள் மழைக்கு முன்தாகவே தமிழ்நாடு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 31,500 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்தவை,
தமிழ்நாடு முழுவதும் சரிசெய்யப்பட்டுள்ளன. மின்கம்பிகளை பொறுத்த வரைக்கும் 1.800 கீ.மீ அளவிற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சீறிய பணிகளின்
காரணமாக மின்விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாகவே ஆய்வு கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு துறைகளில் என்ன என்ன
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொண்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடற்கரை பகுதிகள் இருந்தால் சரி, சென்னையாக இருந்தாலும் சரி சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் .ராஜேஷ்லக்கானி, இ.ஆ.ப. இயக்குநர்/பகிர்மானம்.மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0 Comments