Loading . . .




தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

The Forecast 3 years ago மின்சார துறை

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.


0 Comments

Post your comment here

மின்சார துறை Relateted News