உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் அறிக்கை; பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு” என்று கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய நாள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
0 Comments