ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை -தி.மு.க. அறிவிப்பு
The Forecast 3 years ago திமுக
தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர்ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. பற்றி குற்றச்சாட்டு சொல்லப்போகிறேன் என்றார். ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அவர் சொல்லியிருக்கிறாரா? என்று பார்த்தால் இல்லை. எல்லாவற்றையும் பார்க்கும்போது, உள்ளபடியே பட்டிமன்றத்தை பார்ப்பது போல உள்ளது.
அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி.
செய்திகள் மாவட்ட செய்திகள் சினிமா விளையாட்டு மத்திய பட்ஜெட் - 2023 தேவதை புதுச்சேரி பெங்களூரு மும்பை ஜோதிடம் ஆன்மிகம் தலையங்கம் இ-பேப்பர் புகார் பெட்டி ஸ்பெஷல்ஸ் உங்கள் முகவரி மணப்பந்தல் DT Apps சனிக்கிழமை, ஏப்ரல் 15, 2023 முகப்புசெய்திகள்மாநில செய்திகள் ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை -தி.மு.க. அறிவிப்பு தினத்தந்தி ஏப்ரல் 15, 5:04 am அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 12 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர்ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- Also Read - நம்பி ஏமாந்துடாதீங்க... வசீகர குரலில் பேசி ஆடையில்லாத போட்டோ கேட்ட பெண்...வீடியோ காலில் காத்திருந்த ஷாக்.. Powered By பட்டிமன்றம் போல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. பற்றி குற்றச்சாட்டு சொல்லப்போகிறேன் என்றார். ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது அவர் சொல்லியிருக்கிறாரா? என்று பார்த்தால் இல்லை. எல்லாவற்றையும் பார்க்கும்போது, உள்ளபடியே பட்டிமன்றத்தை பார்ப்பது போல உள்ளது. Also Read - துப்பாக்கிசூட்டில் பலியான ராணுவ வீரர்.. சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட உடல் - திடீரென ஆம்புலன்சை மறித்த ஊர் மக்கள் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் இடையிடையே நகைச்சுவை செய்வார்கள். ஒரு மணி நேரம் பார்த்தால், அரை மணி நேரம் சிரிக்க கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும். அதேபோலத்தான் அண்ணாமலையின் பேட்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. Also Read - டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள்...! எடப்பாடியை மிரட்டும் அண்ணாமலை....? ஊழல் குற்றச்சாட்டு அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி. Also Read - தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல் அண்ணாமலை கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எங்கேயாவது லஞ்சம் வாங்கினார்கள். இப்படி பண்ணியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார் என்றால் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். யார் யார் சொத்துகளையோ சேர்த்து சொல்லியிருக்கிறார். யார், யார் பற்றி அவர் சொல்லியிருக்கிறாரோ? அவர்கள் அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பார்கள். நீதிமன்றத்துக்கு சுற்றுப்பயணம் நான் நினைக்கிறேன் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காட்டிலும், நீதிமன்றத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்கு சென்றால், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அவர் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். அண்ணாமலை யார் யாருக்கோ சொந்தமானதை எல்லாம் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு அழைப்பார்கள். ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா?. விமர்சனம் செய்கிறாரா? ரபேல் வாட்ச் பில்லை காட்டுவேன் என்று சொன்னார். பில்லை காண்பித்தாரா? சீட்டை மட்டும் காண்பித்துள்ளார். பில்லை காண்பிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் மீது இவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர் எத்தனை வருடம் தொழிற்சாலை நடத்துகிறார். இதைவிட வேடிக்கை என்னவென்றால், இதன்மேல் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை, அமலாக்க துறை உள்ளது. அந்த துறைகள் எல்லாம் பிரதமர் மோடி கையில் உள்ளது. பதவியை பறித்து விடுவார்கள் என்று மோடியையும், நிர்மலா சீதாராமனையும் விமர்சனம் செய்கிறாரா? என்று தெரியவில்லை. திறந்த புத்தகம் தி.மு.க. என்பது திறந்த புத்தகம். எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய அறிவுலக மேதை இல்லை. ஆளுமை திறன் மிக்கவரும் கிடையாது. தி.மு.க.வுக்கு ரூ.1,408.94 கோடி சொத்து இருக்கிறது என்கிறார். அதன் பத்திரத்தை இன்றையில் இருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் தர வேண்டும். தி.மு.க. ரூ.3,418 கோடியில் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறது என்கிறார். அந்த பள்ளிக்கூடங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய ஆதாரத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அடுத்து தி.மு.க.வின் கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை சொல்ல வேண்டும். மடியில் கனம் இல்லை ஆருத்ரா ஊழலில் ரூ.2 ஆயிரம் கோடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்று இருக்கிறார். இதுதொடர்பாக பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்லி, கமலாலயத்தில் போராட்டம் நடத்தினார்கள். அகில இந்திய அளவிலும், மாநில அளிவிலும் இவர்கள் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டை திசை திருப்ப இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். நான் அண்ணாமலைக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தி.மு.க.வை பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. வழியிலேயும் பயம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை அண்ணாமலை தலைவராக இருந்தால் தான், எங்களுக்கு வசதியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதாக இருக்கும். தி.மு.க.வினரை பொறுத்தவரை எதற்கும் பயந்தவர்கள் அல்ல. மக்களுக்காக பாடுபடுபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments