புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறும்போது, "கருணாநிதியின் காலத்திலிருந்து மத்திய அரசை பொறுத்தளவில் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடுதான் இயங்கி வருகின்றோம். அண்மையில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையிலும் கூட முதல்வர் தெளிவாக விளக்கிக் கூறினார். ஆளுநர் நண்பர் என்று சொன்னாலும் நட்புக்காக கொள்கையிலே சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று கூறினார்.
0 Comments