Loading . . .




பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 4.85 கோடி உயரிய ஊக்கத்தொகை

The Forecast 3 years ago அரசு செய்திகள்

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூபாய் 4.85 கோடி உயரிய ஊக்கத்தொகை  தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  (24.11.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்

இவ்விழாவில்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்  தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி. அபூர்வா, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர்கள்  இராமச்சந்திரன், மரு. பொன். அசோக் சிகாமணி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர்  ஐசரி கே. கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News