உழவர் நலத்துறையின் 2021-22 மற்றும் 2022-23 ஆம் வருடங்களுக்கான அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்
The Forecast 3 years ago சமயமூர்த்தி இ.ஆ.ப.,
இன்று (23.12.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை கூட்ட அரங்கில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில், வேளாண்மை- உழவர் நலத்துறையின் 2021-22 மற்றும் 2022-23 ஆம் வருடங்களுக்கான அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சர்க்கரைத் துறை ஆணையர் .சா.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை- உழவர் நலத்துறை அரசுச் செயலாளர் .சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., சர்க்கரை துறை கூடுதல் ஆணையர் /தமிழ்நாடு நீர்வடி மேம்பாட்டு முகமை செயல் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) .டி.அன்பழகன், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே.பொ) .ஆர்.முருகேசன், விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் கோ.வளர்மதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments