பாஜவை வீழ்த்த காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
The Forecast 3 years ago திமுக
பாஜவை வீழ்த்த காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி வீழ்த்த காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொள்கைகள் பாஜவின் கொள்கைளுக்கு எதிரானவை. பாஜவை வெறும் தேர்தலுக்காக மட்டும் ராகுல் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் அவரை பாஜ குறிவைக்கிறது. இது உண்மையில் ராகுலில் பலத்தை காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி உடனான தேர்தல் கூட்டணி இதுவரை திமுகவுக்கு எப்படி உதவியது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரசுடனான கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடருமா? குறிப்பாக 2024ல் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலமைப்பை நிறுவிய நமது தேச தலைவர்கள், நம்மிடம் ஒப்படைத்த, அதன் அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. நமது அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைவது முக்கியம். அந்த கூட்டணி, காங்கிரஸ் உள்ளடக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் திமுக ஏற்கனவே அப்படியொரு கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணி எங்கும் செயல்படுத்தக் கூடிய வெற்றிகரமான கூட்டணி என்பதையும் நிரூபித்து காட்டி உள்ளது. இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
* காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது பழைய பாதைக்கு திரும்பி உள்ளது.
* பாஜவை வெறும் தேர்தலுக்காக மட்டும் ராகுல் எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் அவரை பாஜ குறிவைக்கிறது.
* அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைவது முக்கியம். அந்த கூட்டணி, காங்கிரஸ் உள்ளடக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும்.
* இது எங்கும் செயல்படுத்தக் கூடிய வெற்றிக்கூட்டணி என்பதை தமிழகத்தில் நாங்கள் நிரூபித்து காட்டி உள்ளோம். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
0 Comments