பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தேனியில் உள்ள வாசவி மஹாலில் தற்போது சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் ஜி அவர்கள் வருகை தந்து வழி காட்டினார். மேலும் இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக பாரத பிரதமர் அவர்களின் தாயார் காலமானதை தொடர்ந்து உருவ படத்திற்கு இராம சீனிவாசன் ஜி அவர்கள் மவுன அஞ்சலி செலுத்தி மலர் தூவியும் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
0 Comments