Loading . . .




தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

The Forecast 3 years ago அரசு செய்திகள்

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  (30.1.2023) தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலனிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு வக்ஃப்  வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர் சீ. சுரேஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்  மு. ஆசியா மரியம், இ.ஆ.ப.,முதன்மை செயல் அலுவலர் . ஏ.பி. ரஃபியுல்லா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News