Loading . . .




கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

The Forecast 3 years ago புதுக்கோட்டை

கந்தர்வக்கோட்டை பிப் 14. புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை  காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம், சார்லஸ் டார்வின் பிறந்த தினம், துளிர் திறனறிவுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. அறிவியல் பட்டதாரி ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியை பிரதீபா நர்மதா ஒருங்கிணைத்தார். முப்பெரும் விழாவிற்கு கந்தர்வகோட்டை அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா தலைமையில் நடைபெற்றது அப்போது பேசியதாவது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் துளிர் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பபட்டு வருகிறது. 

நமது பள்ளியில் கடந்த ஆண்டு துளிர் திறனறித் தேர்வில் 21 மாணவர்கள் தேர்வு எழுதி அனைத்து மாணவர்களும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். சர்வதேச பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் பெண்கள் அறிவியல் துறையில் அதிக அளவில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என்பதாகும்.

சார்லஸ் டார்வின் பிறந்த தினம் குறித்து பேசும் போது 

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் தந்தை எனப்படும் சார்லஸ் ராபர்ட் டார்வினின் பிறந்த நாள் பிப் 12. இவர் ஆங்கிலேயே இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களுள் மிக முக்கியமானவராக இவர் திகழ்வதற்கு அவரது பரிணாம வளர்ச்சி கொள்கைளையே சிறந்ததும், மக்கள் அதிகம் ஏற்றுக்கொண்டதும் காரணமாகும். இவரின் பரிணாம வளர்ச்சி கொள்கை ஒரு அடிப்படையான புரட்சிகரமான அறிவியல் கொள்கை.     இவர் தான் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும் 1859ம் ஆண்டு உயிரனங்களின் தோற்றம் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இந்த புத்தகம் புகழ்பெற்றதும், புரட்சியை ஏற்படுத்தியதும் ஆகும். இவர் கப்பலில் உலகம் முழுவதும் பல இடங்களில் சுற்றி உயிரன கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அன்று கூறியவற்றை பலர் எள்ளி நகையாடினர். ஆனால் இன்று இவர் அறிவியல் உலகம் போற்றும் மாபெரும் அறிஞர். இவரது கருத்துகளும் அறிவியல் உலகம் இன்றும் கொண்டாடும் மதிப்புடையவை. 

‘குரங்கிலிருந்து பரிணமித்தவன் மனிதன்‘, உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சி ‘தகுதியானது உயிர்பிழைக்கும்‘ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளை கண்டறிந்தவர். என்று பேசினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை  ஆசிரியர்கள் அகிலாண்டேஸ்வரி, ஆரோக்கியதாஸ் செய்திருந்தனர். சிறப்பாசிரியர் அறிவழகன் கலந்து கொண்டார். நிறைவாக கீதா நன்றி கூறினார்.

0 Comments

Post your comment here

புதுக்கோட்டை Relateted News