Loading . . .




வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்

The Forecast 3 years ago உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 3 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.


0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News