அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு குறித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது
கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து. ஏப். 1 முதல் முன்தேதியிட்டு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
இதன்படி, இப்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்படும்.
16 லட்சம் பேர் பயன்: அகவிலைப்படி உயர்த்தப்படுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர்.
இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,366.82 கோடி கூடுதல் செலவு
ஏற்படும். ஆனாலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
மத்திய அரசின் அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்கும்போதெல்லாம் தமிழக அரசும் வழங்க வேண்டுமென அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து, இனிவரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம். தமிழக அரசும் அதைப் பின்பற்றி அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்தும்.
கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி, கடன் சுமை, கரோனா தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையிலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர்
எவ்வளவு கிடைக்கும்? 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதால் ஒவ்வொருவரின் அடிப்படை ஊதியத்துக்கு ஏற்ப பணப்பலன்கள் கிடைக்கும்.
அதாவது, அரசுப் பணிகளில் கடைசி நிலையில் பணியாற்றும் ஊழியர் முதல் கூடுதல் செயலர் நிலை வரையிலான அதிகாரி வரை அகவிலைப்படி உயர்வால் பயன்பெறுவர். அவர்களுக்கு ரூ.600 முதல் ரூ.8 ஆயிரம் வரை மாதந்தோறும் கூடுதல் பணப்பலன் கிடைக்கும் என்று நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன் எப்போது? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், .
ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜன. 1-ஆம் தேதி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்படி, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. இதன்பின், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 4 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
மத்திய அரசு அறிவித்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.
நன்றி: அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு, முதல்வர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
அப்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments