ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள்- அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்
The Forecast 2 years ago சிறுபான்மைத் துறை
தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் தலைமையில், ஹஜ் புனிதபயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, இ.ஆப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழுத் தலைவர் அப்துல் ஜப்பார், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் .எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., விமான நிலைய அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments