விழுப்புரம்ஜமாபந்தியில் 783 மனுக்கள் பெற்று 260 பயனாளிகளுக்கு ரூ.19.89 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை
மேல்மலையனூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 783 மனுக்கள் பெற்று 260 பயனாளிகளுக்கு ரூ.19.89 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, மக்கள்கொடுக்கும் மனுக்களுக்கு அக்கறை காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வு வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்அவர்கள் தகவல்.
விழுப்புரம மாவட்டம், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறையின் மூலம், 1431-ஆம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ்
தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தலைமையேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டுகாலத்தில்
தற்பொழுது வருவாய் தீர்வாயம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த பத்து
நடத்தப்பட்டு ஜமாபந்தி நடத்தப்பட்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள்
பெறப்பட்டுள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து
செயல்பட்டதன் பயனாக இன்றை தினம் 260 நபர்களுக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணைவ ழங்கப்படுகிறது.
மேல்மலையனூர் வட்டத்தில், அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு பல்வேறு அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி ஏழாவது நிகழ்ச்சியாக
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒருவார காலம் நடைபெற்ற ஜமாபந்தியில் 783 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றில் உடனடி தீர்வாக 260 மனுக்கள் தீர்வு காணப்பட்டு அரசு நலத்திட்ட
உதவிகள் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 523 மனுக்கள் தீர்வு காணும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மீதமுள்ள மனுக்கள் மீது எப்பொழுது தீர்வு
காணப்படும் என கேட்டறிந்ததுடன், விரைவில் அம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவ்வப்பொழுது அமைச்சர் பெருமக்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தி தங்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள
திட்டப்பணிகள் யாவை, வழங்கிய நலத்திட்ட உதவிகள், தேவையான கோரிக்கைகள் என்ன
என்பதெல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொண்டுவருவதுடன், இதன் மூலம், பொதுமக்கள் தங்களை
நாடிவந்து கோரிக்கை மனுக்களை வழங்குவதால் அதற்கான தீர்வினை முறையாக வழங்கிடும்
பொருட்டு உரிய அலுவலர்களிடம் வழங்கி அதற்கான தீர்வினை கண்டு அவர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
0 Comments