Loading . . .




அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தனக்கு சொந்தமான 60 இலட்சம் மதிப்புள்ள இடத்தை இருளர் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

The Forecast 3 years ago சிறுபான்மைத் துறை

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.   என்பது வள்ளுவன் வாக்கு

 விளக்கம்:   வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

இந்த குறளுக்கு உதாரணமா ஒரு அமைச்சர்  நம் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம். அது நமது சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 

கிருஷ்ணாபுரம் பகுதி இருளர் மக்கள் தங்களுக்கு வாசிக்க இடம் இல்லை என்று சிறிது நாட்கள் முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்த போது அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் உடன் இருந்தார். 

ஒருவருக்கு இலவச பட்டா கொடுக்க வேண்டும் என்றால் அமைச்சர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சொல்லி அரசு இடத்தை ஒதுக்கீடு செய்து அதில் ஏழை எளியவர்களுக்கு பட்டா வழங்குவது வழக்கம் ஆனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் தனக்கு சொந்தமான ரூ.60 இலட்சம்  மதிப்புள்ள  இடத்தை ஏழை இருளர் மக்களுக்கு தானமாக வழங்கினார். 

இந்த இடத்தை தனது மனைவி மகளுடன் பதிவாளர் அலுவலகம் சென்று ஆளுநர் பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 

கிருஷ்ணாபுரம் பகுதி இருளர் மக்களுக்கு வழங்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது .

என் பெற்றோர்கள் எனக்கு என்ன சொல்லி வளர்த்தார்களோ   அதையே நான் என் வாழ்வில் செய்துவருகிறேன் அதன்படிதான் எனக்கு சொந்தமான இடத்தை அவர்களுக்கு இந்த இடத்தை அளித்தேன் என்றார்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றால் அது இதுதான் என்று அவர் தொகுதி மக்களுக்கு உணர்த்தி விட்டார்.  ஏழை இருளர் மக்கள் இந்த இடம் இருக்கும் வரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும் என்று நன்றியோடு கூறுகின்றனர்.

0 Comments

Post your comment here

சிறுபான்மைத் துறை Relateted News