Loading . . .




தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,

The Forecast 2 years ago அரசு செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  கூட்டுறவுத் துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ. அன்பரசன்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன்,  சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் . பி. கீதா ஜீவன்,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் . அர. சக்கரபாணி,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் . ஆர். காந்தி,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வி. கணேசன்,  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News