அதிக மதிப்புடைய சொத்து விவரத்தை வருமானவரி இணையதளத்தில் பதிவேற்றாவிட்டால் நடவடிக்கை: சார்-பதிவாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
The Forecast 3 years ago அரசு செய்திகள்
தமிழகத்தில் ரூ.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய சொத்து ஆவண விவரங்கள் வருமான வரித் துறையின் (ஐ.டி) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்; இதை கண்டிப்பான மூறையில் பின்பற்றாத சார்-பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொண்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும், ரூ.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட சொத்து ஆவண விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்து
றையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதாவது, சொத்தை விற்பவர். வாங்குபவர். ஆதார் எண். நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை), சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இது படிவம் 61ஏ என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விவரங்களைத் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தகவல், சார் பதிவாளர் அலுவலகங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
நிதியாண்டு முடிவடைந்த இரணடு மாதங்களுக்குள் படிவம் 51ஏ குறித்த அறிக்கையை எந்தெந்த சார்பதிவாளர்கள் பதிவேற்றம் செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத் துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப்படவில்லை. இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத விவரங்கள் குறித்து மட்டும் அவ்வப்போது வருமான வரித்துறையால் பதிவுத் துறை தலைவருக்கு நினைவூட்டல்கள் அனுப்பப்படும்அதன்மீது பதிவுத் துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பார்
எந்தெந்த விவரங்கள் சேகரிப்பு: வருமானவரித் துறையின் , மேலும், ரூ.30 லட்சத்துக்கும்
பதிவு விவரங்கள் அனைத்தும் பதிவுத் துறையின் மையக் கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வருமானவரித் துறைக்கு அளிக்கப்படும்.
இணையதளத்தில் சொத்து ஆவண பதிவு லிவரங்களை பதிவேற்றம் செய்யும் வகையில், ஆவணப் பதிவுக்கு முன்பே, ஆவணதாரர்களிடம் இருந்து போதிய விவரங்கள் பெறப்படுகின்றன. குறிப்பாகரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு உரும் நிலையில், விற்பவர் மற்றும்
வாங்குபவர்களிடம் இருந்து நிரந்தர கணக்கு எண் (பான்) பெறப்படுகிறது. கணக்கு எண் இல்லாதவர்கள். வருமான வரிச் சட்டத்தின்படி படிவம் 60-ஐ அளிக்க வேண்டும். இந்த விவரமும் மென்டொருள் வழியாக சேகரிக்கப்படுகிறது.
மேற்பட்ட விற்பனை ஆவணங்களாக இருந்தால், சொத்தை விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் ஆதார் எண், நிரந்தர கணக்கு எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் பதிவுத் துறையின் கணினி பென்பொருள் வழியாக கோரப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட் விவரங்கள் அனைத்து ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததும், வருமான வரித்துறை இணைய தளத்தில் சார் பதிவாளரால் பதிவேற்றம் செய்யப்படும்.
பதிவு பணிகளை மேற்கொள்ளும் தருணத்திலேயே, சொத்தை விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அவை உடனடியாக ஆதார் இணையதளத்துடன் சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் ஆகியன இணைக்கப்பட்டுள்ளதால், பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும்
வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத் துறையின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகத் தொகை மதிப்புடைய சொத்து ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித் துறையின் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் இதனைச் செய்யாத சார்-பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார் தினேஷ்.பொன்ராஜ் ஆலிவர்,
dhgdc
cgydcg
3 years ago