தமிழகத்தில் சிதிலமடைந்த 30,392 குடியிருப்புகளுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சர்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழகத்தில் 30,392 சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சென்னை, ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.134.26 கோடியில் 770 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நாட்டினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னைக்குள்பட்ட பகுதிகளில் 27,038 குடியிருப்புகள் உள்பட தமிழகத்தின் பிற நகரங்களிடல் உள்ள 3,354 குடியிருப்புகள் என மொத்தம் 30,392 குடியிருப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் நீண்ட நாள் பயன்பாடு உள்ளிட்டவற்றால் சிதிலமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் குடியிருப்புகளை இடித்து,
ரூ.2,400 கோடியில் 15,000 புதிய
குடியிருப்புகள் கட்ட தமிழக
அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து முதல்கட்டமாக
சென்னைக்குள்பட்ட பகுதிகளில்
6,192 பழைய குடியிருப்புகள்
இடிக்கும் பணிகள் நடைபெற்று
வருகின்றன. 7,175 புதிய
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்பந்தபுள்ளி
கோரப்பட்டுள்ளது. ஓரிரு
மாதங்களில் கட்டுமானப்
பணிகள் தொடங்கப்படும்.
புதிய தொழில்நுட்பங்களைக்
கொண்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் மிக குறுகிய காலத்தில் கட்டடங்கள் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக தற்போது டாக்டர் தாமஸ் சாலை திட்டப் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 770 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் 18
மாத காலத்துக்குள்
முடிக்கப்பட்டு, அவற்றில்
குடியிருந்தவர்களுக்கே வீடுகள்
மீண்டும் ஒப்படைக்கப்படும்
என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வாரிய மேலாண்
இயக்குநர் பொ.சங்கர்,
ஆயிரம்விளக்கு சட்டப்பேரவை
உறுப்பினர் மருத்துவர்
நா.எழிலன், மாநகராட்சி பணிகள்
குழுத் தலைவர் நே.சிற்றரசு.
தேனாம்பேட்டை மண்டல குழு
தலைவர் எஸ்.மதன்மோகன்,
வாரியத் தலைமை பொறியாளர்
வே.சண்முகசுந்தரம் உள்ளிட்டவை
பலர் கலந்துகொண்டனர்.
0 Comments