276 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் . சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப.,
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 276 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகக் கட்டடங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 56 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட மனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய்ப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் உயரமான கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், சௌரிபாளையத்தில் 8 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம்;
தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு கிராமத்தில்,
60 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 222 அடுக்குமாடிக் குடியிருப்புகள்; நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், கூடலூர் கிராமத்தில் 10 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 30 குடியிருப்புகள்; தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீரநாயகன்பட்டி கிராமத்தில் 35 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 122 அடுக்குமாடி குடியிருப்புகள்;
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், அமைந்தகரை வட்டம், முள்ளம் கிராமத்தில் 17 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவிலும், மயிலாப்பூரில் 7 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவிலும், திருவான்மியூரில் 8 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவிலும்,
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கணபதி கிராமத்தில் 10 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டடங்கள் மற்றும் சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், மாத்தூர் கிராமத்தில் 9 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம்;
சென்னை மாவட்டம், திருவான்மியூரில் 6 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில், தூண்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட 10 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்;
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கணபதியில் 22 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் 48 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகள், 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 56 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 27 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவில் 60 உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், நல்லூர் கிராமத்தில் 25 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 70 அடுக்குமாடிக் குடியிருப்புகள்;
என மொத்தம் 276 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகக் கட்டடங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், முள்ளூர் கிராமத்தில் 56 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1603 மனைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் . சு. முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் . பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments