Loading . . .




திமுக எம்.பி.க்கள் கூட்டம் : முக்கிய விவகாரங்கள் ஆலோசனை!

The Forecast 2 years ago திமுக

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, உள்ளிட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக சார்பில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சிவில் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

குறிப்பாக மத்திய அரசு கொண்டுவரவுள்ள பொது

அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும், விலைவாசி உயர்வு, இலங்கை எல்லையில் தமிழக மீனவர்களின் கைது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

திமுக Relateted News