Loading . . .




தலைமைச் செயலகத்தில் தீவிர கண்காணிப்பு!

The Forecast 2 years ago அரசு செய்திகள்


சென்னை: சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அலுவலகங்களுக்கு வருபவர்களை தீவிர விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்தபோது, சென்னை தலைமைச் செயலகத்துக்குள் புகுந்து அமைச்சரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

அரசு செய்திகள் Relateted News