Loading . . .




காஞ்சி சங்கராச்சாரியாரை 'பிரதமர்' மோடி கட்டி பிடிக்க தடை விதிப்பதே சனாதனம்: காங். பீட்டர் அல்போன்ஸ்

The Forecast 2 years ago காங்கிரஸ்

உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிற பிரதமர் மோடியால் இந்தியாவில், தமிழ்நாட்டின் காஞ்சி சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்கவே முடியாது என தடை விதிப்பதே சனாதனம் என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்

சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: தேசத்தை இருளின் பிடியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் எதையும் எதிர்பார்க்காத செயல் வீரர்களால் தான் முடியும். மோடி தினசரி ஒரு நாட்டிற்கு செல்கிறார். வெளிநாட்டு தலைவர்களையும் உலக மதங்களின் மதக்குருக்களை எல்லாம் கட்டிக்கொள்கிறார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் முதல் அரேபிய நாட்டு மன்னர்கள் வரை அனைவரையும் கட்டி அணைக்க முடிந்த சர்வ வல்லமை படைத்த பிரதமர் மோடியால், காஞ்சி மடத்தில் உள்ள சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்க முடியுமா? அது தான் சனாதனம்

ஆயிரம் ஆண்டுகளாக போராடி வந்தாலும், சனாதனம் இன்றளவும் இருக்கிறது. சனாதனத்தை அழிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு ஏன் வந்திருக்கிறது என்றால், நீதிமன்றங்களில் இன்றைக்கு வரும் தீர்ப்புகள் எல்லாவற்றையும் பார்த்து பதற வேண்டியுள்ளது. மனு நீதியை மேற்கொள் காட்டி தீர்ப்பிடுகின்ற நீதிமன்ற அவலங்கள் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்களுடைய வெறுப்பை தூண்டிவிட்டு,சனாதனத்தின் பெயரில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நடக்காத கொடுமைகள் இன்றைக்கு நடக்கிறது.

பட்டியலின மக்கள் மீது சிறுநீர் கழிப்பது, பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுப்பது போன்ற செயல்களை பா.ஜ.க, அரசாங்கம் சனாதனத்தின் பெயரில் நடத்தி கொண்டிருக்கிறார்கள். சனாதன கும்பலின் ஆயுதமாக மோடி உள்ளார். இந்த தேர்தலில் சனாதன வேறுகளை அகற்ற வேண்டும். இளைஞர்கள் மக்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் பா.ஜ.க அரசின் அவலங்களை எடுத்து சொல்லி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

இந்த மாநாட்டில், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநித் ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பொய்யான பிரசாரத்தை பாஜகவினர் செய்து வருவதால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News