Loading . . .




உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி: அயோத்தி சாமியார் படத்திற்கு தீ வைத்து தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

The Forecast 2 years ago திமுக

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அண்மையில் பேசியது நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது.  குறிப்பாக பா.ஜ.கவினர் மத்திய அமைச்சர்கள் முதல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா அமைச்சர் உதயநிதி புகைப்படத்தை தீ வைத்து கொளுத்தி,  வாளால் குத்தி கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் தலைக்கு ரூ. 10 கோடி வழங்குவதாகவும் கூறி மிரட்டல் விடுத்தார்இந்நிலையில்,  சாமியாரின் செயலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நகர செயலாளர் நவநீதன் கிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் சாமியார் புகைப்படத்தை செருப்பில் அடித்து தீ வைத்தனர். சாமியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் தலைமையில் காந்தி சிலை அருகே சாமியார் உருவ பொம்மைக்கு தீ வைத்து கோஷங்கள் எழுப்பினர். திடீரென திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

0 Comments

Post your comment here

திமுக Relateted News