40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
The Forecast 2 years ago அதிமுக
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் அ.தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பலத்தை காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமான முறையில் எழுச்சி மாநாட்டையும் அவர் நடத்தி காட்டினார்.
0 Comments