Loading . . .




எடப்பாடி அணியின் முயற்சி தோல்வி; அண்ணாமலையை மாற்ற அமித்ஷா மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய நிர்வாகிகளுடன் ஆலோசனை

The Forecast 2 years ago அதிமுக

சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் அண்ணாமாலையை மாற்றாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று மிரட்டுவதற்காக டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகளை சந்திக்க மறுத்ததோடு அவர்களது கோரிக்கை படி, எந்த மாற்றமும் கட்சியில் செய்ய முடியாது என்பதை திட்டவிட்டமாக தெரிவித்து விட்டார் அமித்ஷா. இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

குறிப்பாக இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்ற மோதல் இருந்து வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது. அதன்பின்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, பாஜகவுடன் சேர்ந்ததால்தான் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. எங்களால் அவர்களுக்குத்தான் பலன். எங்களுக்கு இழப்புதான் என்றார். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் இரு அணியினரும் தனித்துப் போட்டியிட்டனர். அதில் பல இடங்களில் இரு அணியினருமே டெபாசிட் இழந்தனர். இதனால் இந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க டெல்லி பாஜ மேலிடம் முடிவு செய்தது. இதற்காக அண்ணாமலையுடன் மோதலில் ஈடுபட்டிருந்த எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா பேசினார்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், வெளிநாட்டில் முதலீடுகள் பற்றிய விபரங்கள் எங்களிடம் உள்ளது. இதனால் நாங்கள் நினைத்தால் பல மாஜி அமைச்சர்களை கைது செய்ய முடியும் என்று மிரட்டும் தொனியில் பேசி கூட்டணியை இறுதி செய்து எடப்பாடியை அனுப்பி விட்டார். இதனால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியிலும் வர முடியவில்லை. கூட்டணியாகவும் செல்ல முடியாமல் அவர் தவித்து வந்தார். இந்தநிலையில்தான் அண்ணா பற்றி அண்ணாமலை கற்பனையாக பேசினார். இதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். ஆனால் இரண்டே நாளில் அதிமுக தலைவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூவை விட்டு சமாதானக் கொடியை பறக்க விட்டதோடு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜ ஏற்க வேண்டும் என்றார். ஆனால் இதற்கு அண்ணாமலை மறுத்து விட்டார். தமிழகத்தில் பாஜ ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும் என்று பதிலடி கொடுத்தார். இதனால், அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி தொடரும் என்று தெரிவிப்பதற்காக ரகசியமாக முன்னாள் அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அமித்ஷாவை சந்தித்து புகார் செய்யும்படி கூறினார்.

0 Comments

Post your comment here

அதிமுக Relateted News

Latest News