Loading . . .




நாளை சென்னை காமராஜர் அரங்கில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம்: காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநில தலைவர் தகவல்

The Forecast 2 years ago காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் டி.ஏ.நவீன் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி-பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம்-முக்கியத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நாளை மாலை 5 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கருத்தரங்கிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகிக்கிறார்.

தி.க தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் எம்பி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தவாகா தலைவர் வேல்முருகன், விஜய் வசந்த் எம்பி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். நிகழ்ச்சியை கே.சீரஞ்சிவி, கே.மகேந்திரன், ரஞ்சித்குமார், கோபி கிருஷ்ணன், கே.வெங்கட் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கின்றனர்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News