Loading . . .




ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடிக்கு ஆளுமை இல்லை; ஒபிசி மக்களின் நலனுக்காக எதையும் செய்யாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

The Forecast 2 years ago காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை நேர்தல் தொடர்பாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவது என காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பாஜக ஆட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு செல்ல வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசால் நடத்த முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

“பாஜகவின் 10 முதல்வர்களில் ஒருவர் மட்டுமே ஒபிசி

காங்கிரஸில் 4 முதலமைச்சர்களில் 3 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவில் 10 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்; அதில் ஒருவர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாஜகவில் உள்ள ஓபிசி பிரிவை சேர்ந்த ஒரு முதல்வரும் இந்த தேர்தலுக்குப் பிறகு முதல்வராக நீடிக்க மாட்டார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மோடிக்கு ஆளுமை இல்லை

முதலமைச்சர்கள் அசோக் கெலாட், சித்தராமையா, புபேஷ் பகெல், சுக்விந்தர் சுகு புடைசூழ ராகுல் பேட்டியளித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், ஆளுமையும் பிரதமர் மோடிக்கு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியின, ஒபிசி பிரிவு மக்களை தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.

ஒபிசி மக்களின் நலனுக்காக எதையும் செய்யாதவர் மோடி

ஓபிசி மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியின, ஓபிசி பிரிவு மக்களை தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.

சத்தீஸ்கர்,ராஜஸ்தானில் மீண்டும் காங். ஆட்சி-ராகுல்

சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; மிசோரமிலும் சிறப்பாக பங்காற்றுவோம்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News