ம.பி.யில் இலவச கல்வி; ஐபிஎல் அணி: தோ்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி...
The Forecast 2 years ago காங்கிரஸ்
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி போபாலில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட மாநிலத் தலைவா் கமல்நாத், மூத்த தலைவா் திக்விஜய் சிங்.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி போபாலில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை வெளியிட்ட மாநிலத் தலைவா் கமல்நாத், மூத்த தலைவா் திக்விஜய் சிங்.
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக் கல்வி இலவசமாக்கப்படும்; அந்த மாநிலத்துக்கான ஐபிஎல் அணி உருவாக்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தலைநகா் போபாலில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
மாநில காங்கிரஸ் தலைவா் கமல்நாத் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 59 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வாக்குறுதிகளில், அனைவருக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா், பள்ளிக் கல்வி இலவசம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித்தொகை, மத்திய பிரதேசத்துக்கு ஐபிஎல் அணி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
0 Comments