சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே சரிந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சமீபத்திய விலை மாற்றத்தின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.20 உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.7.38 அதிகரித்துள்ளது. தொடர்ச்சியான இந்த விலை உயர்வு தினசரி பயணிகள், சரக்கு போக்குவரத்து துறை மற்றும் தனியார் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
டீசல் விலை உயர்வு பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பாதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச எண்ணெய் சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு விலை நிர்ணய கொள்கைகள் இந்திய எரிபொருள் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை இந்த உயர்வு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
0 Comments