Loading . . .




இந்தியா வந்தார் அமெரிக்கச் செயலாளர் மார்கோ ரூபியோ

The Forecast 4 hours ago தேசிய செய்திகள்

அமெரிக்கச் செயலாளர் மார்கோ ரூபியோ நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான தூதரக உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் நடைபெறுகிறது. தனது பயணத்தை அவர் கொல்கத்தா நகரத்தில் தொடங்கியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து ஆக்ரா  மற்றும் ஜெய்பூர் நகரங்களுக்கு செல்ல உள்ளார். பின்னர் மே 26ஆம் தேதி New Delhiயில் நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.


இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் கூட்டமைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறது.


இந்த பயணத்தின் போது இருநாட்டு உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் தொடர்பான விவாதங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பயணம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான தொடர்ந்து வலுப்பெறும் உறவுகளை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News