Loading . . .




நெதர்லாந்து பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

The Forecast 12 hours ago தேசிய செய்திகள்

பிரதமர் மோடி, ஆறு நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அமீரக பயணத்தை முடித்து நெதர்லாந்து சென்றடைந்தார். இந்த பயணம் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறுகிறது.

அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதுமைத் துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின் போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளும் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு நெதர்லாந்து செல்லும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின் போது உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

இந்தியா தற்போது உலக நாடுகளுடன் தொழில்நுட்ப கூட்டாண்மையை அதிகரிக்கும் முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்து பயணம், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News