Loading . . .




இந்திய ஆன்லைன் சந்தையில் ஃப்ளிப்கார்ட் முன்னிலை

Janani G 1 hour ago தேசிய செய்திகள்


ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவின் ஆன்லைன் விற்பனை சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஐசிஐசிஐ செக்யூரிடீஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, இந்திய மின்னணு வணிக சந்தையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 50 முதல் 60 சதவீதம் வரை பங்குகளை கொண்டுள்ளது. மேலும், மாதந்தோறும் சுமார் 22 கோடி நிலையான பயனர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவின் ஆன்லைன் வணிகத் துறையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், அமேசான் நிறுவனம் 25 முதல் 30 சதவீத சந்தைப் பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மீஷோ நிறுவனம் சுமார் 10 சதவீத பங்குகளுடன் வளர்ச்சி பெற்று வருகிறது.


இணைய பயன்பாடு அதிகரித்தல், மின்னணு கட்டண முறைகள், விரைவான பொருள் விநியோகம் மற்றும் சலுகை விற்பனைகள் போன்ற காரணங்களால் இந்தியாவில் ஆன்லைன் வணிகம் வேகமாக வளர்ந்து வருகிறது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் ஆன்லைன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆய்வு, இந்தியாவில் மின்னணு வணிகத் துறையின் வளர்ச்சியையும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்லைன் விற்பனை தளங்களின் முக்கியத்துவமும் தொடர்ந்து உயர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News