Loading . . .




விரைவில் கனகபுராவை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைக்கப் போகிறேன் : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

The Forecast 2 years ago கர்நாடகா

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் கனகபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: கடந்த தேர்தலில் எனது சொந்தஊரான கனகபுராவில் நான் பிரச்சாரம் செய்யாமலேயே மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை பரிசாக வழங்கின‌ர். அந்த மக்களுக்கு தசரா பரிசு அளிக்கவே இங்கு வந்துள்ளேன். விரைவில் கனகபுராவை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைக்கப் போகிறேன்.

பெங்களூரு பொறுப்பு அமைச்சரான நான், இந்த நகரின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டியுள்ளேன். கனகபுரா பெங்களூருவுடன் இணைக்கப்பட்டால் இங்கு நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இங்குள்ள மக்களுக்கு அனைத்து வகையான நலத்திட்டங்களும் கிடைக்கும். கனகபுரா சர்வதேச நகரமாகமாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News