Loading . . .




பெங்களூருவில் ஒரே நாளில் 111 மி.மீ மழை பதிவாகியுள்ளது ; 133 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

The Forecast 1 year ago கர்நாடகா

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில்,  111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால்  பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

1891 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஹம்பி நகரில் 110.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையின் அளவாகும். 5-ஆம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி மழை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்” என்றார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News