கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் துபாய் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி
The Forecast 2 years ago கர்நாடகா
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.74 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் மீது டெல்லி மக்கள் பிரதிநிதி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று முதல் டிசம்பர் 3ம் தேதி வரை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால் துபாய் செல்ல அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து 5 லட்சத்தை ஜாமீன் தொகையாக செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர் துபாயில் பயன்படுத்திய அலைபேசி எண் மற்றும் அங்கு மேற்கொள்ள வேண்டிய பயணத் திட்டங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
0 Comments