தெலங்கானாவில் இன்று ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
The Forecast 2 years ago அரசியல் செய்திகள்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவு, மாலை 4 மணியுடன் மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடையும். பதற்றம் ஏற்பட்டுள்ள 4,000 வாக்குச் சாவடிகளில் கூடுதல் ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2,676 மூன்றாம் பாலின வாக்காளர்களும், 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 9.99 லட்சம் புதிய வாக்காளர்களும் என மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, 3.75 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்கு சேகரிப்பார்கள்.
0 Comments