Loading . . .




சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

The Forecast 2 years ago அரசியல் செய்திகள்

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி சென்னையில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், "அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News