எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சி.பி.சி.எல். நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது
The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.
தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப.,
சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல், வனத் துறை ஒரு குழு அமைத்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) வளாகம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பகுதிகளில் அந்த குழு ஆய்வு செய்து, கடந்த 11-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு, சிபிசிஎல் வளாகத்தில் எண்ணெய் கசிவு உருவாகி பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக, எண்ணூர் கழிமுக பகுதியை அடைந்தது கண்டறியப்பட்டது. சிபிசிஎல் வளாகத்தில் இருக்கும் வெள்ள நீர் மேலாண்மை சிக்கல்களையும் அந்த குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்துக்கு வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி மற்றும் அருகே உள்ள இடங்களில் எங்கெல்லாம் கசிந்த எண்ணெய் தேங்கியுள்ளது என்பதை உடனே கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தண்ணீரில் எண்ணெய் படர்ந்துள்ள பகுதியை கண்டறிந்து, அதை அகற்ற மேற்கொள்ளப்படும் திட்டத்தை உடனடியாக வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எண்ணூர் கழிமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., தலைமையில், அமைக்கப்பட்ட மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை தொடர்பான உயர்நிலை குழு கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, எண்ணெய் கசிவால் அப்பகுதிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், சென்னை மாநகராட்சிக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடாத்தக்காது.
0 Comments