Loading . . .




கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., , ஆய்வு.

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சிந்தாதரிப்பேட்டை F1காவல்நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தலைமைச் செயலாளர் இந்த சமுதாய கூடத்தில்  நியாய விலைக் கடைகளுக்கான 6 முகாம்கள் நடைபெறுவதை  பார்வையிட்டார். மேலும் அங்கு வருகை தந்த மக்களிடம் கலந்துரையாடி அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்தார் .

இதனைத் தொடர்ந்து,தலைமைச் செயலாளர்  வார்டு-56, மண்ணடி, ஜீல்ஸ் தெருவில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் தலைமைச் செயலாளர் அங்கு விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் தன்னார்வலர்களிடம் விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்திடும்படியும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல்தலைமைச்செயலாளர் மாநகராட்சி/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மண்டல கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கே.விஜயகார்த்திகேயன்,இ.ஆ.ப., , வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., , மண்டல அலுவலர் .ஜி.தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News