Loading . . .




வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆய்வு கூட்டம் - தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,

The Forecast 2 years ago சிவ தாஸ் மீனா இ.ஆ.ப.

தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்து மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள ஆதாரத்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், முதன்மைச் செயலாளர் / மேலாண்மை இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட், முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 

மேலண்மை இயக்குநர், அரசு செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயக்குநர். பேரிடர் மேலாண்மை, இணை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களின் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, தலைமைப்பொறியாளர், நீர்வள ஆதார துறை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

இக்கூட்டத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய உண்மை நிலை குறித்து ஒரு பிரத்யோக குழு மூலம் 45 இடங்களில் பெற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்துதல், தடுப்பரண் (Barricade) அமைத்தல், மின்சார கம்பங்கள் மாற்றியமைத்தல், குடிநீர் குழாய் மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் மொத்தம் 45 இடங்களில் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இவ்விடங்களில் பணிகளை விரைவாக முடிக்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். 

கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அவர்கள் நெடுஞ்சாலைகள் துறை முலம் ரூ.85 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் 15.10.2023-க்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். மேலும், அண்ணாசாலை மற்றும் ஈ.வெ.ரா பெரியார் சாலையில் Silt Catch Pit அமைக்கும் பணிகளும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்கப்படும். தலைமைச் செயலாளர் அவர்கள் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 17 கல்வெட்டு தூர்வாரும் பணி மற்றும் அனைத்து மழைநீர் வடிகால்களையும் தூர்வாரும் பணியினை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வள ஆதார துறை அவர்கள் நீர்வள ஆதார துறையினால் பருவ மழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள் - 77 பணிகள் (51 பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி, 26 பணிகள்  தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில்) ரூ.186 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.  மேலும் ரூ.250 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு பணிகள் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவுறுத்தினார்கள். 2023-2024-ஆம் ஆண்டு இறுதியில் 15 இடங்களில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் தணிகாச்சலம் கால்வாய் மற்றும் மாதவரம் டேங்க் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில்  செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

தலைமைச் செயலாளர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள். அவ்வை சண்முகம் சாலையில் ஒப்பந்ததாரர் மழைநீர் வடிகால் பணி மெதுவாக செய்வதினால், அவருக்கு அபராதம் விதிக்குமாறும், தாக்கீது அளிக்குமாறும் கூறினார்கள். பராக்கா சாலையில் தற்போது மந்த நிலையில் பணி நடைபெற்று வருவதால், இப்பணியினை வேறு ஒரு ஒப்பந்ததாரர் முலமும் மேற்கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்கள். பீட்டர்ஸ் சாலை இரண்டாவது தொடர்ச்சி விரைவில் தொடங்கப்பட வேண்டும். புஸ்பவதி கால்வாயின் மேல் தளத்தை உடைத்து தூர்வாரும் பணியை விரைந்து முடிவெடுக்க வேண்டும். மாதா கோயில் தெரு இராஜீவ்காந்தி நகர் ஒப்பந்ததாரருக்கு மந்தகதி பணிக்காக தாக்கீது வழங்கப்பட வேண்டும். திருவள்ளுவர் நகர் நீர் மட்டத்தை ஆய்வு செய்து அடுத்த கள ஆய்வில் பணி பார்வையிடப்பட வேண்டும். Silt Catch Pit அமைக்கும் பணி வேகமாக நடைபெற வேண்டும். ADB மற்றும் KfW நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளில் நீர் வடியும் இடம் சரியாக இருக்க வேண்டும். அனைத்து மழைநீர் வடிகால் பணிகளும் 30.09.2023-க்குள் முடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் இராமன் தெரு மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். தடுப்பரண் (Barricade) அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் Silt Catch Pit அமைக்கும் பணிகளையும் 30.09.2023-க்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள்.

ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். 

சென்னை மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறும் இடங்களான, வடபழனி ஆற்காடு சாலை, வளசரவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்கள். காளியம்மன் கோவில் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி மற்றும் பனகல் பூங்காவில் கீழ்நிலை நீர்தொட்டி அமைக்கும் பணிகளையும் விரைவில் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். போட் கிளப் சாலையில் மெட்ரோ இரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் கைடுவால் அமைத்து மழைநீர் செல்ல வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில், ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் பணியினை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். 

இறுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்காக பிரத்யோகமாக நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வு செய்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.


0 Comments

Post your comment here

சிவ தாஸ் மீனா இ.ஆ.ப. Relateted News