Loading . . .




15 நாட்களில் இண்டியா கூட்டணி தலைவர் தேர்வு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகவல்

The Forecast 1 year ago காங்கிரஸ்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். பின்னர் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கார்கே கூறும்போது, “இந்தக் கேள்வி உங்களில் யார் கோடீஸ்வரர் (கவுன் பனேகா குரோர்பதி) என்பது போல் உள்ளது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும். அதுபற்றி கவலைப்படாதீர்கள்” என்றார்.

0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News